வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனித்துவம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். ‘சூதுகவ்வும்’ திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான அவர், ‘தெகிடி’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘தக் லைப்’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
சமீபத்தில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘18 மைல்ஸ்’ எனும் புதிய காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், மிர்னா கதாநாயகியாக நடித்து உள்ளார்.
மனித வாழ்வின் எல்லைகள், கடலின் அமைதி, சொல்லப்படாத உணர்வுகள் போன்ற உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்த படம், தனித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘18 மைல்ஸ்’ படக்குழுவினர் அண்மையில் பிரபல இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்துள்ளனர். படத்தின் காட்சிகளைப் பார்த்த மணிரத்னம், படக்குழுவினரது முயற்சியை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘18 மைல்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!