• Sep 15 2025

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். இவருடைய முதல் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படத்திற்கு An Ordinary Man என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான படம் தான் ஜெயம். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரவி மோகன் என அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து ரவி மோகன் நடித்த படங்கள் சமமான வெற்றித் தோல்வியை தழுவின. அத்துடன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் பல சிக்கல்களை எதிர்கொண்டார். இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்வதாவும் உறுதியாக அறிவித்தார்.


அதன்பின் ரவி மோகன் தனது நெருங்கிய தோழியான கெனிஷாவுடன் வலம் வந்தார். கெனிஷா எனக்கு கடவுள் தந்த வரம் என உருக்கமாகவும் பேசியிருந்தார். தொடர்ந்து கெனிஷாவும் ரவியை பெற்றதற்கு அவருடைய அம்மாவுக்கு நன்றியும் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் ரவி மோகன் - கெனீஷா ஆகிய இருவரும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement