• Aug 16 2025

இளையராஜாவின் 'ஓம் சிவோஹம்' பாடலை மனமுருகி ரசித்த பிரதமர் மோடி.! வைரலான வீடியோ.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பாரம்பரியத்தை உலகமே பாராட்டும் வகையில், தமிழக மண்ணின் பெருமையை பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மாமன்னர் இராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா, அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றதுடன், இசைத் திருமுகமான இளையராஜா அவர்களின் மேடை அமைப்பும், இசை நிகழ்ச்சியும் அனைவரது மனதையும் கவர்ந்தது.


அதிலும் குறிப்பிடத்தக்கது, இளையராஜா பாடிய 'ஓம் சிவோஹம்' பாடலை கேட்டவுடன், பிரதமர் மோடி எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டிய தருணம்! 

இராஜேந்திர சோழனின் நினைவாக இன்று அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் ஏற்பாட்டில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி நேரில் வருகை கொடுத்திருந்தார். 


அங்கு இளையராஜாவின் 'ஓம் சிவோஹம்' இசைக்கு, பிரதமர் எழுந்து நின்று பாராட்டிய  வீடியோ, மற்றும் திருவாசக இசை நிகழ்வின் சிறு பகுதிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement