• Aug 16 2025

கிங்ஸ்லி மீது லவ் வர இதுதான் காரணம்..! மனைவி சங்கீதா ஓபன்டாக்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் அதிகளவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கிங்ஸ்லி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாது, supporting roles-லயும் உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியவர்.

அத்தகைய நடிகரின் மனைவியான சங்கீதா சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்த அவர்களது காதல் கதை ரசிகர்களையே உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது.


ஒரு பெண்ணின் வாழ்க்கையில், தந்தையின் மறைவு என்பது மிகப் பெரிய அழுத்தம். அந்த நேரத்தில் யார் மனசுக்குள் ஒளிவிட்டு நுழைய முடியுமோ, அவர்கள் வாழ்க்கையின் அடையாளமாக மாறுவர். அந்த உண்மையை மிக நேர்த்தியாக சங்கீதா தனது வார்த்தைகளின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் சங்கீதா, "எல்லாருக்கும் லவ் spark எப்புடி எப்புடியோ வரும். ஆனா எனக்கு அது என் அப்பா இறந்த நேரத்தில தான் வந்தது. கிங்ஸ்லி அப்பா இறந்த போது உடனே வர முடியாம இரண்டு நாள் கழிச்சு வந்தாரு.

வீட்டில் எல்லோரும் சோகமா இருந்த சமயம்… இவர் வந்த 5 நிமிஷத்திலயே எல்லாரும் சிரித்தார்கள். எல்லாரையும் கலகலன்னு மாற்றிட்டாரு. அங்க தான் உணர்ந்தேன். இந்த ஆள் வாழ்க்கை துணையாக இருந்தா நிச்சயம் நிம்மதி இருக்கும்." எனக் கூறியிருந்தார். 


சங்கீதா மேலும் கூறுகையில், "எங்க அப்பாவும் இதே மாதிரி தான்... எல்லாரையும் சிரிக்க வைக்குறவர். குடும்பத்துக்குள் ஒரு ஃபிரண்ட் மாதிரி. கிங்ஸ்லியை பார்த்த உடனே, எனக்கு என்ர அப்பா தான் ஞாபகம் வந்தாரு. இதுக்கப்புறம் இவரைத் தவிர வேற யாராவது வாழ்க்கை துணையா வந்தா மனசுக்கு உடனடியாக ஏற்க முடியாது என்று தோணிச்சு. அங்க தான் என் லவ் கிளிக்காயிடுச்சி." என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement