• Apr 27 2025

விக்கிரமின் அடுத்த பட சம்பளம் இவ்வளவா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்கிரம் கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்களில்  சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், சமீப காலமாக அவரது படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், அவரது அடுத்த படம் பற்றிய அப்டேட் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

விக்கிரமின் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் பாராட்டைப் பெற்றிருந்தாலும்  அதனை அடுத்து அவர் வெளியிட்ட படம் ரசிகர்களிடம் குறைவான வரவேற்பையே பெற்றுள்ளது. இதனால், அவரின் மார்க்கெட் தற்பொழுது குறைந்துள்ளதாகவே திரையுலகத்தில் பேசப்படுகிறது.


இத்தகைய நிலையில் விக்கிரம் தனது அடுத்த படத்திற்காக 50 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் திரையுலகில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஒரு நடிகரின் மார்க்கெட் நிலை குறைந்தும் அவரது சம்பளத்தில் மாற்றம் இல்லாது இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த சம்பளம் வழங்கப்பட்டால் விக்கிரம் திரும்பவும் திரையரங்குகளில்  வெற்றி பெறக்கூடிய படங்களிலேயே நடிக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement