• Jun 15 2026

பிரேக்கப் வதந்திகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? சுனைனா காதல் விவகாரத்தில் திருப்பம்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை சுனைனா. 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், பின்னர் 'நீர்ப்பறவை', 'மாசிலாமணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் காலித் அல் அமெரி உடன் சுனைனா காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், நிச்சயதார்த்தத்தை சுட்டிக்காட்டும் தருணங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றனர்.

ஆனால் தற்போது இருவரின் உறவு குறித்து புதிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சுனைனா மற்றும் காலித் அல் அமெரி இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதாகவும், ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்களது கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து சுனைனா அல்லது காலித் அல் அமெரி தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. எனவே சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement