• Aug 11 2025

ரோகிணியின் திருட்டுத்தனத்தை அறியும் மனோஜ்! ஷாக்கில் விஜயா.. சிறகடிக்க ஆசை அதிரடி திருப்பம்

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி தன்ர அம்மாவை பார்த்து எப்புடியாவது நீ கிரிஷை  முத்து கிட்ட இருந்து வாங்கிடு என்று சொல்லுறார். மேலும் அவன் இருக்க நான் ஏதாவது ஏற்பாடு செய்யுறேன் என்கிறார். பின் ரோகிணி அம்மா இன்னும் 10 நாள் ஹாஸ்பிடலில இருக்கணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து கிரிஷ் ரோகிணிட ரூமுக்குள்ள போய் நிக்கிறார்.


அதைப் பார்த்த ரோகிணி நீ எதுக்காக இங்க எல்லாம் வந்தனீ என்று கேட்கிறார். அதுக்கு கிரிஷ் எனக்கு தூக்கம் வரல நான் உன்கூடவே இருக்கிறேன் என்கிறார். பின் ரோகிணி நான் தான் உன்ர அம்மா என்ற விஷயத்தை யாருக்கும் சொல்ல கூடாது என்கிறார். இதனை தொடர்ந்து மீனா கிரிஷை கூப்பிடுறதை பார்த்த ரோகிணி நீ அவங்க கூடவே போய் நித்திர கொள் என்று சொல்லுறார். பின் கிரிஷ் மீனா கூட நித்திரை கொள்ளுறதை பார்த்த ரோகிணி அழுகிறார். 

அதை தொடர்ந்து கிரிஷை முத்து school க்கு போக வேணாம் என்று சொல்லுறார். அதுக்கு கிரிஷ் school போகாம நிக்கிறதென்றால் englishல mail அனுப்பனும் என்கிறார். அதைக் கேட்ட விஜயா முத்து உனக்கெல்லாம் english தெரியுமா என நக்கலாக கேட்கிறார்.  இதனை தொடர்ந்து ஸ்ருதி கிரிஷை பார்த்து உங்க அம்மா இப்ப எங்க இருக்காங்க என்று கேட்கிறார்.


 பின் ரோகிணி கிரிஷுக்கு letter எழுதி தாறேன் என்கிறார். அதை தொடர்ந்து letterல ரோகிணி தன்ர பெயரை அம்மா என்று போட்டிருக்கிறதை பார்த்த மனோஜ் என்ன செய்யுற என்று கோபமாக கேட்கிறார். பின் விஜயாவோட டான்ஸ் classல இருக்கிற பொண்ணு மயங்கி விழுறார். அதனை தொடர்ந்து டாக்டர் வந்து அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கிறா என சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா ஷாக் ஆகுறார். 

Advertisement

Advertisement