• Aug 11 2025

ஜனனிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.! "உசுரே" படத்தை பாராட்டிய பிரபல நடிகர்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

'அசுரன்' திரைப்படத்தில் சிறந்த நடிப்பால் கவனம் பெற்ற டீஜே அருணாச்சலம், அந்த படத்தை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து கொண்டார். அவருடைய நடிப்பு திறமை, இயல்பான முகபாவனை எல்லாம் தன்னிச்சையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொடுத்தது.


மற்றொரு பக்கம், ‘பிக்பாஸ்’ சீசன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜனனி. அவரது அழகு, பேசும் முறை, மற்றும் வெளிப்படையான உணர்வுகள் ரசிகர்களிடையே பிரபலமாக்கின. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால், ‘உசுரே’ மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


ட்ரெய்லரில், காதலுக்கும் வாழ்க்கை சோதனைகளுக்கும் நடுவே சிக்கிக் கொள்ளும் ஒரு ஜோடியின் மன உளைச்சல்கள் காட்டப்பட்டுள்ளன.

இப்படத்தில் அருணாச்சலமும் ஜனனியும் தங்களது இயல்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். தற்பொழுது இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 


இந்த புகைப்படத்தை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதுடன் அதனுடன் இணைத்து "கடவுளே, இது மறக்க முடியாதது.." என்ற பதிவினையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement