• Apr 16 2026

மாயாவுக்கு ராஜவிருந்து வைத்த வனிதா விஜயகுமார்! நட்பில் திளைத்த பிக் பாஸ் பிரபலங்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக முடிவடைந்த போதிலும், அது தொடர்பான கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் பேசுப் பொருளாகவே காணப்படுகின்றது.

இம்முறை பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, திருப்பங்கள், சண்டைகள், துரோகங்கள், எமோஷனல் என அனைத்தையும் கடந்து,  இறுதியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றியோடு வந்த போட்டியாளர்கள், தற்போது பார்ட்டி, சுற்றுலா, ரசிகர்கள் என தமது நேரத்தை ரொம்ப பிசியாக செலவிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் மாயாவுக்கு ராஜ விருந்து வைத்துள்ளாராம் வனிதா விஜயகுமார். இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

அதன்படி, வனிதா வீட்டில் மாயா மற்றும் மாயாவின் அக்கா, கானா பாலா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இதேவேளை, புத்தாண்டு தினத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களை வனிதா தனது வீட்டில் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement