• Aug 28 2025

SQUID GAME 3 தொடரின் இறுதிப் போர்..! ரசிகர்களை பதறவைக்கும் வகையில் வெளியான ட்ரெயிலர்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

உலகளாவிய அளவில் வெற்றிபெற்ற மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த “Squid Game” தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த ட்ரெயிலர், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.


கொடிய விளையாட்டு, உயிரிழப்பு, அதிரடி திருப்பங்கள் என அனைத்தையும் ஒன்றாகக் கிளறிய இந்த தொடரின் இறுதி அத்தியாயம், எதிர்பார்க்கும் எல்லா உணர்வுகளையும் தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

2 நிமிட 30 விநாடிகள் கொண்ட இந்த ட்ரெயிலர், கதையின் புதிய லெவலை காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் "Squid Game Season 3" திரைப்படம் தியட்டரில் 2025 ஜூன் 27ம் தேதி வெளியிடப்படுகிறது.


இது ஒரு 2 மணி நேர 40 நிமிடங்கள் கொண்ட “Cinematic Finale” ஆக அமையும் எனவும் கூறப்படுகின்றது. குறும்படத் தொடராக இல்லாமல், முழுமையான தியட்டர் ரிலீஸ் என்ற அதிரடி முடிவை படக்குழு எடுத்திருப்பது ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement