• Aug 28 2025

விஜய் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மிரட்டினார்களா.? திவ்யா சத்யராஜ் கொந்தளிப்பு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்திய ஒரு வீடியோவில், திவ்யா சத்யராஜ் வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் விவாதத்துக்கு வித்திட்டுள்ளன. அதன்போது, நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் மீது நேரடியாக கடுமையான விமர்சனங்களை திவ்யா வலுக்கட்டாயமாக முன்வைத்துள்ளார்.


“தனிப்பட்ட முறையில் எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் எந்த சண்டையும் இல்ல, அரசியல் கோணத்தில்தான் நான் கேள்விகளை எழுப்புறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்கள், அல்லது த.வெ.க கட்சியில் இருந்து வெளியேறிய பெண்கள் மீது விஜயின் தொண்டர்கள் ஆசிட் வீசுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அம்மா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது போல பெண்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் செயல்களை நீங்கள் (விஜய்) ஒரு தலைவராக தட்டிக் கேட்க வேண்டியது கடமை அல்லவா?” என்று கேள்வியெழுப்புகிறார் திவ்யா.


இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்படுகின்றது. பலர் திவ்யாவின் நேர்மை மற்றும் துணிச்சலுக்கு பாராட்டுகளை தெரிவிக்க, மற்றுமொரு பக்கம் விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். திவ்யாவின் இந்தக் காணொளி வெளியான பிறகு, பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்கள் எழுகின்றன.

Advertisement

Advertisement