• May 28 2026

அர்ஜுனின் வாழ்க்கையில் நிகழ்ந்த வேதனையான சம்பவங்கள்.. ரசிகர்களை கலங்க வைத்த உண்மை!

shali / 3 days ago

Advertisement

Listen News!

சினிமாவில் வெற்றி, தோல்வி இரண்டும் சாதாரணம் என்றாலும், சில நேரங்களில் அந்த தோல்விகள் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். அப்படிப்பட்ட கடுமையான காலத்தை தான் எதிர்கொண்டதாக சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் அர்ஜுன்.

அவர் கூறுகையில், “ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகள் என்னை மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது. என்னிடம் இருந்த சொத்துக்களைக் கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பாதித்த பணம் அனைத்தும் நஷ்டமாகி, என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன்.


 எனக்கு நன்றாக கார் ஓட்டத் தெரியும் என்பதால், நடிப்பை விட்டுவிட்டு டிரைவிங் வேலைக்குச் சென்றுவிடலாமா என்றும் தீவிரமாக யோசித்தேன்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “அத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ரசிகர்கள் என்னை கைவிடவில்லை. ‘நீங்கள் ஒரு நல்ல படம் கொடுத்தால் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்’ என்ற அவர்களின் நம்பிக்கையே என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது. அந்த அன்பும் ஆதரவும் தான் இன்று வரை என்னை சினிமாவில் நிலைநிறுத்தி வருகிறது.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தற்போது அர்ஜுன் பகிர்ந்த இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Advertisement

Advertisement