• Sep 01 2025

மிர்னாவா? மமிதாவா? யார் லோகேஷுக்கு ஜோடி? நடிகைகளின் பதிலுக்காக காத்திருக்கும் படக்குழு...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

மாநகரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக கால் வைத்த லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். விஜய், கமல், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் பணியாற்றி, தற்போது தமிழ்ச் சினிமாவின் மிகப்பெரிய நாமாக உயர்ந்துள்ளார்.


கூலி படத்திற்கு பிறகு அவர் கைதி 2 இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ரஜினி மற்றும் கமலை வைத்தே இன்னொரு பெரிய திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கு இடையில், ‘சாணி காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய திரைப்படமும் உருவாகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்காக பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.


மிர்னா மேனன், மமீதா பைஜு, யோகலட்சுமி, ரக்‌ஷிதா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் பட்டியலில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களில் யார் கால்ஷீட் ஒத்துவருகிறார்களோ, அவரே லோகேஷின் ஜோடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

தற்போது கோலிவுட்டில் ‘லோகேஷுக்கு மச்சம்’ என புதிய கிசுகிசு பரவி வருகிறது. முன்னணி இயக்குனராக வெற்றி பெற்றவர், இப்போது ஹீரோவாகவும் வெற்றி பெறுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement