• Sep 01 2025

யாரெல்லாம் ஆர்வத்தோட இருக்கீங்க?அடிச்சு புடிச்சு வந்தாச்சு பிக்பாஸ் 9 சீசனின் முதல் டீசர்!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.  அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டது.  எந்தவொரு ரியாலிட்டி ஷோக்கும் இல்லாத வரவேற்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்தது. இது டிஆர்பி  ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஏழு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் .  ஆனால் எந்த ஒரு சீசனுக்கும் இல்லாத வரவேற்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனுக்கு கிடைத்தது. அதற்கு காரணம் குறித்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியது தான். 

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று எதிர்பார்த்த போதும்.  பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து  இறுதிவரை போட்டியாளர்களிடம் எதையும் சுற்றி வளைத்து பேசாமல், நேரத்தையும் வீணடிக்காமல்,   தன் மனதில் பட்டதை முகத்திற்கு நேராக பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  ஆனாலும் கடந்த சீசன் டிஆர்பி யில் பெரிய அடி வாங்கியதாக கூறப்படுகிறது. 


பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள்  நடைபெறுவதோடு இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்  வெளி உலக தொடர்பிலிருந்து முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு,  அங்கு கொடுக்கப்படும் பணிகளையும். டாஸ்க்குகளையும் சிறப்பாக நிறைவேற்றி, இறுதியில் மக்கள் கொடுக்கும் வாக்குகளின் ஆதரவுடன் பிக்பாஸ் டைட்டிலையும்  பரிசுத்தொகையும்  வென்று வெளியேறுவார் .

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டிலை வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும்,  மூன்றாவது இடத்தை விஷால், பவித்ரா ஆகிய இருவரும் பிடித்தனர். 

இந்த நிலையில்,  பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனுக்கான புதிய டீசர்  ஒன்று சற்றுமுன்  வெளியாகி உள்ளது .  அதில் விஜய் சேதுபதி  தனக்கே உரித்தான தனி கெத்துடன்  ஆரம்பிக்கலாமா.? என்பது  போல காணப்படுகின்றார். தற்போது இந்த டீசரை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள்  பெருமகிழ்ச்சியுடன்  தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.





Advertisement

Advertisement