• Sep 01 2025

"பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல"...!BAD GIRL இயக்குநர் வர்ஷா பரத்...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

புதிய திரைப்படமான ‘BAD GIRL’ பற்றிய செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் வர்ஷா பரத் தனது தீவிரமான கருத்துகளை பதிவு செய்தார். பெண்களின் உடல், உரிமை, மற்றும் குரலைப் பற்றிய இந்தப் படம், சமூகத்தில் நீண்ட காலமாக நிலவும் இரட்டைநிலைகளை கேள்வி கேட்கிறது.


"நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் என பேசுபவர்கள்தான், தற்போதைய சமூக ஊடகங்களில் சிலரது வீட்டுப்பெண்களின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்," என வர்ஷா குற்றச்சாட்டு விதித்தார். "அதிலிருந்தே அவர்களின் அரசியல் என்ன, மனநிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது," என அவர் விளக்கினார்.

இப்படத்தின் வெளியீட்டைக் எதிர்த்து, சில தரப்பினர் "இந்த படம் கலாசாரத்தை சீரழிக்கிறது" என்று விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த இயக்குநர் வர்ஷா பரத், "கலாசாரம் என்பது பெண்களை பாதுகாக்க வேண்டியது. பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல. அது அவர்களது பொறுப்பும் அல்ல," என்றார்.


BAD GIRL திரைப்படம், பெண்களின் தனிமனித உரிமைகளை, அவர்களின் விருப்பங்களை மற்றும் அவர்களின் குரலுக்கான மதிப்பை பிரதிபலிக்கும் நோக்கத்தில் உருவாகியுள்ளது. இது, சமூக மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளால் அடக்கப்படும் பெண்களின் குரலை வெளிப்படுத்தும் முயற்சி.

வர்ஷாவின் இந்த கூற்று, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரை ஆதரிக்க, சிலர் எதிர்க்கும் நிலையில், ‘BAD GIRL’ பம்பரம் போல பேசப்படும் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement