தமிழ் சினிமா என்றால் அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது பல தரப்பட்ட சமூக விவாதங்களை தூண்டக்கூடிய ஒரு மேடையும் கூட. சமீபத்தில் இது போன்ற விவாதங்களை தூண்டியவர் நடிகரும் இயக்குநருமான சசிகுமார். அவர் அளித்த ஒரு நேர்மையான பதில், தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, ரசிகர்களிடையே வலுவான ஆதரவையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மதராஸி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நகரின் முன்னணி கல்லூரியில் மாபெரும் கோலாகலமாக நிகழ்ந்தது.
அந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாபெரும் விழாவாக உருவாக்கினார்கள். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், சிலர் "மாணவர்களை சினிமா பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது சரியா?" என்ற கேள்வியையும் எழுப்பத் தொடங்கினர்.
இத்தகைய சூழ்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் சசிகுமாரிடம் கேள்வி எழுப்பினார். “சினிமா புரொமோஷனுக்காக பெரிய நடிகர்கள் கல்லூரிகளில், நேரு ஸ்டேடியம் போன்ற இடங்களில் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துகிறார்களே. நீங்கள் ஏன் அப்படி செய்யவில்லை?” என்றார்.
இதற்கு சசிகுமார், " மாணவர்கள் கல்விக்காக வருகிறார்கள். அவர்களது கல்லூரி என்பது ஒரு புனித இடம். அங்கு என் படத்திற்காக கூட்டத்தை கூட்ட வேண்டும் என நினைப்பது நான் செய்யக்கூடிய செயல் அல்ல." என்று பதிலளித்தார்.
சசிகுமார் அளித்த இந்தப் பேச்சினை ரசிகர்கள், சமீபத்தில் மதராஸி படத்திற்காக கல்லூரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவுடன் தொடர்புபடுத்தி வலிமையான விமர்சனங்களை கிளப்பி வருகின்றனர்.
Listen News!