• Sep 01 2025

பாண்டியனின் அதிரடி முடிவு.! ராஜிக்கு நடந்த அவமானம்... உண்மை வெளிவருமா.? டுடே promo.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ராஜி பாண்டியனைப் பார்த்து உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லுறார். அதைக் கேட்டபாண்டியன் அந்த டான்ஸ் விஷயத்தை தவிர வேற எதை வேணும் என்றாலும் பேசு என்கிறார். அதுக்கு ராஜி நான் டான்ஸ் விஷயமாத் தான் பேசப்போறேன் என்று சொல்லுறார். 


இதனை அடுத்து பாண்டியன் ராஜியை பார்த்து நீ டான்ஸ் பண்ணனும் என்று முடிவு பண்ணிட்ட கிளம்பி போறதா இருந்தால் போயிடு என்கிறார். அதைக் கேட்ட உடனே ராஜி நான் கிளம்பி போறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து போறார்.


அதைத் தொடர்ந்து டான்ஸ் ஆட போன இடத்தில ராஜி கிட்ட ஒராள் தப்பா நடந்துக்கிறார். அதை பார்த்த உடனே ராஜி அங்கிருந்து வெளியில வந்து நிக்கிறார். அந்த நேரம் பார்த்து கதிரும் ராஜிக்கு போன் எடுக்கிறார். அப்ப தனக்கு நடந்ததை சொல்ல முடியாமல் ராஜி தவிச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய promo. 

Advertisement

Advertisement