தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ‘Bad Girl’. தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி, சர்ச்சையை கிளப்பும் டீசரால் இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே பலரும் கவனிக்கும் படமாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் ஜூலை இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், தற்போது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பு தரப்பினர் ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை அஞ்சலி சிவராமன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கை சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
குறிப்பாக நடிகை அஞ்சலி சிவராமன், தனது தோழியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கொஞ்சம் ஷாக் கொடுத்ததாகவே சோஷியல் மீடியா கமெண்ட்ஸ் மூலம் அறியமுடிகிறது. குறிப்பாக, சிலர் “Bad Girl-ல பார்த்த மாதிரியே உண்மையிலும் Bad Girl தான் போலயே..!" என்றும் தெரிவித்துள்ளனர்.
Listen News!