பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ரெஸ்டாரெண்ட் ஓனர் அங்க இருந்து போகச் சொல்லிட்டார் என்று எல்லாருகிட்டயும் சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் அம்மா அங்க வேலை செய்ய ஏதாவது பண்ணலாமா என்று கேக்கிறார். அதுக்கு எழில் விலைக்குத் தானே கொடுக்கப்போறீங்க நாங்களே வாங்குறோம் என்று கேட்டுப் பாத்தேன் ஆனா அந்த ஓனர் சம்மதிக்கல என்று சொல்லுறார். அதனை அடுத்து ஈஸ்வரி அந்த ரெஸ்டாரெண்ட வாங்கிற அளவு பணம் உங்ககிட்ட இருக்கா என்று எழிலைப் பாத்து கேக்கிறார்.
அதுக்கு எழில் லோன் போட்டு வாங்கலாம் என்று நினைத்தேன் என்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி ஏற்கனவே வாங்கின லோனையே கட்டப் பணம் இல்ல அதுக்குள்ள இன்னொரு லோன் எடுக்கப் போறியா என்று கேக்கிறார். அதனை அடுத்து எழில் பாட்டி அம்மாவோட சூழ்நிலை தெரியாம இப்படி எல்லாம் கதைக்காதீங்க என்கிறார்.
இதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து நீ இவ்வளவு நாளா ஓய்வெடுக்காம தானே வேலை செய்தனி இப்ப ஓய்வெடுக்கத் தான் இதையெல்லாம் கடவுள் செய்யுறார் போல என்று சொல்லுறார். மேலும் நீ வீட்ட இருந்து குழந்தைகளப் பாத்துக்கோ என்கிறார். இதனை அடுத்து பாக்கியா என்னோட யாரும் கதைக்க வேணாம் கொஞ்ச நேரம் தனியா விடுங்க என்கிறார்.
மறுநாள் ரெஸ்டாரெண்ட் ஓனர் வந்து பாக்கியாவ இண்டைக்கு இந்த இடத்த விட்டுப் போகணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து அதே இடத்தில சுதாகர் வந்து நிக்கிறதப் பாத்த பாக்கியா இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா என்று கேக்கிறார். பின் வீட்ட வந்து பாக்கியா எனக்கு இனியான்ர வாழ்க்கைய நினைத்துப் பயமா இருக்கு என்று கோபியப் பாத்துச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!