தமிழ் தொலைக்காட்சி உலகில் இன்று முன்னணி தொகுப்பாளராக உயர்ந்துள்ள மணிமேகலை, சமீபத்தில் நடைபெற்ற "ENTERTAINER OF THE YEAR 2025" விருதைப் பெற்றார். இந்த சிறப்பான சாதனைக்குப் பிறகு, தனது பயணம் குறித்து மிகவும் உருக்கமான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
விருது பெற்ற பிறகு செய்தியாளர்களுடன் பேசிய மணிமேகலை, தனது ஆரம்ப காலங்களை நினைவுகூர்ந்தார். அதன்போது அவர் கூறியதாவது, "ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த ஆங்கரிங் வேலைய கூட, என் வாயாலயே வேணாம் என்று சொல்ல வச்சாங்க. எனக்கே நம்பிக்கை இல்லாம போயிருச்சு. சிலர் நேரடியாகவே உன்னால தொகுப்பாளினியாக இனித் தொடர முடியாது என்றனர்.’' என வருத்தமாகக் கூறியிருந்தார்.
அந்த நேரம், அந்த அவமானங்களைக் கடந்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் மணிமேகலை தெரிவித்திருந்தார். மேலும், "அந்த பிரச்சனையால, என் கரியரே முடிஞ்சிடும் என்று எல்லாரும் நினைச்சாங்க. நான் கூட சில சமயம் சந்தேகம் கொண்டேன். ஆனால் அந்த நம்பிக்கையற்ற நிலைமைக்கு அடுத்த நாளே, ஒரு அற்புதமான மாற்றம் நேர்ந்தது." என்றார்.
அது என்னவெனில்,"அடுத்த நாளே ஜீ தமிழிலிருந்து வாய்ப்பு வந்தது. ஒரு புதிய நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அழைத்தாங்க. அது எனக்கு இரண்டாவது பிறவி மாதிரி இருந்தது." என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
Listen News!