தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் ரவிமோகன் தற்போது தனது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். திருமணமாகி விவாகரத்து பெறுவதற்கு முன்னர் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு கை கோர்த்து சென்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இவர்கள் மாறி மாறி தங்களது அறிக்கையை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பாடகி கெனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். குறித்த பதிவில் " அனைத்து குற்றவாளிகளுக்கும் கெனீஷாவின் சட்டக் குழுவிலிருந்து நிறுத்து மற்றும் விலகு அறிவிப்பு" எனும் வக்கீல் அறிக்கை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
Listen News!