குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகர் சிம்பு இடையில் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவில் இருந்து விலகினார். மீண்டும் சூப்பராக கம் பேக் கொடுத்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் "thugh life " எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன் நேற்றைய தினம் மிக பிரமாண்டமாக இசையமைப்பு விழா இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு " மணி சார் குழந்தைகளை வைத்து அஞ்சலி படம் எடுத்தார். அந்த படத்தில படம் full ஆகவே சின்ன பசங்க நடிச்சிருப்பாங்க அந்த படத்தில அஞ்சலி பிரதர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நடித்திருந்தார். அப்போ நான் அந்த படம் பாத்திட்டு அழ தொடங்கிடேன் மணிரத்னம் சார் ஏன் என்ன கூப்பிடல என்று அப்பாகிட்டயும் நானும் இதே வயசு தானே நானும் இங்க தானே நடிச்சிட்டு இருக்கேன் ஏன் என கூப்பிடல என கேட்டேன் அதற்கு அவர் நீ அந்த கதைக்கு செட் ஆகம இருந்திருப்பா இல்லன்னா வேற ஏதும் காரணம் இருந்திருக்கும் என சொல்லி ஏமாத்திட்டார்" என உடைந்து பேசியுள்ளார்.
Listen News!