• May 16 2026

தரமான சம்பவத்திற்கு தயாராகும் சிலம்பரசன்.. 'அரசன்' படத்தில் இணைந்த நட்சத்திர பட்டாளம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக 'அரசன்' அமைந்துள்ளது. இந்தப் படத்தில் முன்னணி நடிகரான சிலம்பரசன் (சிம்பு) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.


வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, அரசன் திரைப்படத்தில் இரண்டு புதிய நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த புதிய இணைப்பு படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வித்தியாசமான கதைகளில் நடிகர்களை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் இந்தப் படத்திலும் வலுவான நட்சத்திர பட்டியலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement