தமிழ்த் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக கூலி திரைப்படம் காணப்பட்டது. இந்த திரைப்படம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. தற்போது லோகேஷ் இயக்கும் படங்கள் என்றாலே தனித்துவமிக்கதாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளன.
அந்த வகையிலேயே கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக அமைந்ததோடு இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா சௌபின் மற்றும் கேமியா ரோலில் அமீர் காணும் மிரட்டி இருப்பார். தற்போது இந்த படம் தொடர்பில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், கூலி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்ருதிஹாசனின் நடிப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன.
அதன்படி அவர் கூறுகையில், கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் எமோஷனல் கொஞ்சமும் ஒட்டவே இல்லை. எமோஷனல் சீனில் அவர் அழுத காட்சிகளும் ஒட்டவே இல்லை. கடைசியில் ரஜினி அவருடைய அப்பா என்கின்றார்கள். ஆனால் அந்த எமோஷனலும் அவருக்கு பொருந்தவில்லை. எதுக்கு ஸ்ருதிஹாசனை போட்டாங்க என்றே தெரியவில்லை.
கூலி படத்தின் முதல் பாதி நல்லா இருக்கு என்று சொல்றாங்க.. ஆனால் முதல் பாதியில் என்ன நடந்துச்சு என்று சொல்லுங்க.. அதில் சொல்லும் அளவிற்கு ஒன்றுமே இல்லை.. எந்தவித சஸ்பென்சும் இல்லை.. ஒரு கோடு போட்டு அந்த கோட்டுக்கு மேலே தான் படம் ஓடுது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Listen News!