• May 28 2026

ராம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… ‘பெத்தி’ குறித்து சிவராஜ்குமார் சொன்ன சூப்பர் அப்டேட்

shali / 1 day ago

Advertisement

Listen News!

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை புச்சி பாபு சனா இயக்கியுள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவராஜ்குமார், ராம் சரண் குறித்து பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

அவர் கூறுகையில், “இந்த படத்தில் ராம் சரணின் தோற்றமும், நடிப்பும் முற்றிலும் வேற லெவலில் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆச்சரியப்பட வைத்தது. இந்த படத்திற்காக அவர் தேசிய விருது வெல்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” எனவும் பாராட்டியுள்ளார்.

சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகரின் இந்த பாராட்டு, ராம் சரண் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement