• May 28 2026

குழந்தையின் நலனுக்காக கோமதி எடுத்த அதிரடி முடிவால் மனம்மாறிய சரவணன்.! ஏற்கமறுக்கும் மயில்

shali / 3 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் கோமதியைப் பார்த்து குழந்தையை பெத்தெடுக்கிறதுக்கு எவ்வளவு செலவிருக்கு போய் மயிலைப் பார்த்து செலவுக்கு பணத்தைக் கொடுத்திட்டு வா என்கிறார். அதைக் கேட்ட கோமதியும் மயில் வீட்டிற்குப் போய் பாக்கியம் கிட்ட பணத்தைக் கொடுத்திட்டுக் கிளம்புறார்.

அதைப் பார்த்த மயில் பாக்கியத்தைப் பார்த்து என்னோட மாமியார் எதுக்கு வந்திட்டு போறாங்க என்று கேட்கிறார். பின் பாக்கியம் பணத்தை மறைக்கிறதைப் பார்த்த மயில் உடனே அதை வாங்கி கோமதி கிட்ட கொண்டுபோய் எனக்கும் குழந்தைக்கும் இந்தப் பணம் வேண்டாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்.


மேலும், என்னோட குழந்தையை எப்படி வளர்க்கணும் என்று எனக்கு நல்லா தெரியும் என்று சொல்லிட்டுக் கிளம்புறார். மறுநாள் காலையில சரவணன் மயிலைப் பார்த்து அந்தப் பணம் ஒன்னும் உனக்கு கொடுத்தது இல்ல என்னோட குழந்தைக்கு கொடுத்தது என்று சொல்லுறார். 

அதைக் கேட்ட மயில், அதுதான் இது உங்க குழந்தை கிடையாது என்று சொல்லிட்டிங்களே பிறகு உங்க பணம் மட்டும் எதுக்கு என்று கேட்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement