• May 28 2026

ராம் சரணின் கேரியரையே உலுக்கப்போகிறதா ‘பெத்தி'.? லீக்கான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!

shali / 3 days ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இருவரின் புதிய ஜோடி திரையில் எப்படி இருக்கும் என்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் படம் பான் இந்திய அளவில் பெரிய வெளியீடாக உருவாகியுள்ளது.

படத்திற்கு இசையமைப்பை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் செய்துள்ளார். அவரது இசை இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்பொழுது வெளியான ‘ஹெல்லல்லல்லோ’ பாடல் சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதில் நடிகை சுருதி ஹாசன் ஆடியுள்ள நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஜூன் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள ‘பெத்தி’ படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Advertisement

Advertisement