தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை, விவாகரத்துக்குப் பிந்தைய மனநிலை மற்றும் புதிய உறவுகள் குறித்து அவர் பகிர்ந்த உணர்ச்சி மிகுந்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த நேர்காணலில் சமந்தா, " விவாகரத்து என்ற நிலையை சந்தித்த போது இனி யாரையும் நம்பவோ, நெருங்கிப் பழகவோ முடியாது என்று தான் நினைத்தேன். ஆனால், அன்பையும் நட்பையும் ஏற்றுக் கொண்ட போது தான் என்னை நானே மீண்டும் கண்டுகொண்டேன்.
இன்று நான் ஒரு மேம்பட்ட நபராக இருப்பதற்குக் காரணம் ராஜ் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் சுதந்திரமாக சுவாசிப்பதாக என் தோழி கூறியது என் மனதைத் தொட்டது. இனி நான் யாரிடமும் எதையும் நிரூபிக்கவோ அல்லது நடிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.." என்று கூறியுள்ளார்.
இந்த வரிகள் பலரின் மனதையும் தொட்டுள்ளன. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்ட பெண்களுக்கு அவரது வார்த்தைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!