தெலுங்கு திரையுலகில் ஒரே படத்தின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகைகளில் ஒருவர் ஷாலினி பாண்டே. 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

முதல் படத்திலேயே வலுவான கதாபாத்திரத்தில் நடித்த அவர், உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
இந்த படத்தின் வெற்றியால் அவர் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மற்றும் இந்தி திரையுலகிலும் கவனம் பெற்றார். அதன் பின்னர் பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களுடன் சேர்த்து சமூக வலைத்தளங்களிலும் ஷாலினி பாண்டே மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், தினசரி வாழ்க்கை தருணங்கள் மற்றும் படப்பிடிப்பு ஸ்டில்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும் தோன்றியுள்ளார்.
Listen News!