நடிகர் பாபி சிம்ஹா தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பினால் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். 'ஜிகர்தண்டா' திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற இவர், பல ஹீரோ மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
அத்தகைய நடிகர் பற்றிய சர்ச்சை ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. சென்னை மாநகரில் சமீபமாக நிகழ்ந்த ஒரு சாலை விபத்து, தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடிகர் பாபி சிம்ஹாவின் காரொன்று கட்டுப்பாட்டை இழந்து, 6க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதியதாக தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தக் காரை ஓட்டிய ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக, அந்த கார் பொலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து சென்னையின் நுங்கம் பாக்கம் சாலையில் நடந்ததாகக் கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருந்தது மற்றும் சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை என்பவற்றாலேயே இந்த விபத்து நிகழ்த்ததாகக் கூறப்படுகின்றது. நடிகர் பாபி சிம்ஹா நேரடியாக இந்த விபத்துக்குப் பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும், அவரது பெயருடன் தொடர்புடைய கார் என்பதால் இந்த விபத்து, அவருடைய பெயருக்கு தீயபெயரை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!