• Aug 28 2025

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்..! உடல் நிலை மோசமான நிலையில் நடிகர் பொன்னம்பலம்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பயங்கர வேடங்களில் திரையுலகில் தனக்கென இடம் பிடித்த நடிகர் பொன்னம்பலம் மீண்டும் சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.


"மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நிலை சீராக இன்னும் 2 மாதம் ஆகலாம். கமல் ஹாசன், தனுஷ், ரவி மோகன், சிம்பு என பலரும் எனக்கு உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு கோடி நன்றி. எனக்காக இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.


பல வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் போராடி வரும் பொன்னம்பலத்திற்காக திரையுலக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் குணமடைவதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement