• May 15 2026

தவெக ஆட்சி அமைக்க ரெடி... கூட்டணிக்காக விரிந்த கைகள்.! கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் அரங்கில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், முழுமையான பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.


அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவு த.வெ.க.க்கு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டணிகள் உறுதியானால், ஆட்சி அமைப்பதில் விஜய்க்கு தெளிவான பாதை உருவாகும்.

இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விஜய், தனது கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவரது அரசியல் அணுகுமுறையைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளது.


அவரது இந்த செயல், மரியாதை, ஒற்றுமை மற்றும் கொள்கை சார்ந்த அரசியலை முன்னிறுத்தும் ஒரு சின்னமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய் எடுத்த இந்த நடைமுறை, அவரது அடுத்த அரசியல் பயணத்தின் திசையை சுட்டிக்காட்டுவதாக பலரும் கருதுகின்றனர்.


Advertisement

Advertisement