'தேசிங்கு ராஜா 2' திரைப்படத்தின் பிரமாண்ட விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, தற்போதைய ஆன்லைன் திரைப்பட விமர்சன கலாசாரத்தை கடுமையாக விமர்சித்தார். ரசிகர்கள், மீடியா நண்பர்கள், மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
செல்வமணி அதன்போது, “ஆன்லைன் திரைப்பட ரிவ்யூவர்கள் ஒரு படத்தை பாராட்டினால் அவர்கள் வீடியோக்களை யாரும் பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள்.அதனால் சில டேக் லைன் வைத்து வீடியோக்கள் பதிவிடுகிறார்கள்.”
"உங்கள் ரிவ்யூக்களை 24 மணிநேரம் கழித்து போட்டால் ஒரு நாளாவது அந்த படம் ஓடும். படத்தை விமர்சியுங்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. " எனத் தெரிவித்திருந்தார். செல்வமணியின் பேச்சு தற்போது திரையுலகத்தில் திடீர் புயலை கிளப்பியுள்ளது. சிலர் அதை கண்மூடித்தனமான வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்கள். அதேசமயம் சிலர் அவரது கருத்துகளை ஆதரித்துள்ளனர்.
Listen News!