• Jul 01 2025

Tere Ishk Mein ஷூட்டிங்கை நிறைவு செய்த தனுஷ்...!மகிழ்ச்சியாக பகிர்ந்த தனுஷ்...!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் ஒரு பன்முக திறமை வாய்ந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து தேவையில்லை. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் தன்னை செம்மையாக நிரூபித்துள்ளவர். இந்நிலையில் அவர் நடித்து வரும்' என்ற இந்திப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஆனந்த் எல். ராய் இயக்கி வருகிறார். இவர் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதாலேயே இது ரசிகர்களிடையே மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


"இட்லி கடை" படத்தை அடுத்து தனுஷ் எந்த இயக்குநருடன் பணியாற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.  ஆனால்  தனுஷ் தனது முழு கவனத்தையும் தற்போது இந்த ஹிந்திப் படத்திற்கே செலுத்தி வந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைத்துள்ளார். மேலும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் முக்கிய காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட்டன. சிட்டியின் பிஸியான ரோடுகள், மரபுத் தலங்கள் மற்றும் நவீன இடங்களை பின்னணியாகக் கொண்டு படமானது. தனுஷ் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டத்தை உருவாக்கியதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானவை.


இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது  தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படபிடிப்பு நிறைவுற்றதாக பதிவிட்டுள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .மேலும் ரசிகர்கள் "தேரே இஷ்க் மெய்ன்" என்பது வெறும் காதல் கதை அல்ல, அது ஒரு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் ஒரு குழுவின் தீவிர முயற்சியின் பலன். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனை இருக்கும் என எதிர் பார்க்கபடுகின்றது. 


Advertisement

Advertisement