• Apr 17 2026

'சர்தார் 2' படம் தொடர்பில் வெளியான மாஸ் அப்டேட்! நடிப்பு அரக்கனுக்கு முக்கிய கேரக்டர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான 'சர்தார்' படத்திற்கு மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும்  நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இதனை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் மிக விரைவில்  உருவாக உள்ள நிலையில், பி.எஸ் மித்ரன் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் என தெரியவருகிறது. அத்துடன், இதில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் சர்தார் படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளாராம்.

அதுமட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் 'நடிப்பு அரக்கன்' எஸ்.ஜே. சூர்யா, வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement