சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி ரசிகர்களிடையிலும் பரவலாக அறியப்பட்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். பாரம்பரிய மற்றும் நவீன சமையல் கலையை அற்புதமாக இணைத்துத் தரும் அவரது சமையல் வீடியோக்கள், குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் குடும்பங்களில் தனி இடம் பிடித்துவிட்டது.
இப்போது அவரைச் சுற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்த காதல் கிசுகிசுக்கள் உண்மையான நிகழ்வாக மாறியுள்ளன. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணம், தற்பொழுது ஒரு கோயிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் கலை வல்லுநராக மட்டுமின்றி ஒரு சிறந்த குடும்ப மனிதராகவும் அறியப்பட்டவர். ஆரம்பத்தில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாகவே குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், ரங்கராஜ் மற்றும் ஸ்ருதியின் உறவு முறிவு அடைந்ததாகவும் தகவல்கள் பரவின.
இதனிடையே, அவரது பெயருடன் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இணைக்கப்பட்டு பல கதைகள் பரவத் தொடங்கின. தற்பொழுது, சமூகவலைத்தளங்களில் இருவரும் திருமணம் செய்து ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, இந்த உறவு குறித்து உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதம்பட்டி ரங்கராஜின் ரசிகர்கள் இந்த திருமணத்திற்கு கலந்த விதமாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒருபுறம், அவருடைய முந்தைய குடும்ப வாழ்க்கை மீதான கவலைகளும், இன்னொரு புறம், புதிய உறவு மீதான பாராட்டுகளும் இணையத்தில் கலந்துவந்துள்ளன.
Baby loading 2025🤰
We are pregnant 🤰
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ
Listen News!