• Apr 19 2026

புத்தாண்டு தினத்தில் குடும்பத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- கியூட் பமிலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகிவர் தான் நடிகை நயன்தாரா. இவர்'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து 'ஐயா' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகினார்.இதன் பின்னர் விஜய், அஜித்,ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.


தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் இறுதியாக அன்னபூரணி திரைப்படம் வசூலில் அள்ளிக் குவிக்காவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.


இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம்,செய்திருக்கும் இவருக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.குடும்பத்துடன் அடிக்கடி போட்டோஷுட் செய்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்தாருடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement