விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் அரசியலில் களம் இறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதோடு, சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
மேலும், தனது நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படமே தனது கடைசி படம் என்றும் தெரிவித்தார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இந்த படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜனநாயகன் ’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தேவையான சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், இதுவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இதற்கிடையில், இந்த படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, முதற்கட்டமாக ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த படத்தை கேபிள் டிவிகளில் ஒளிபரப்பிய நபரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன் ’ படத்தை இணையதளங்களிலும், கேபிள் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Listen News!