பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தாமரைச்செல்வி. இவர் சின்ன மருமகள் சீரியலிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றார். அதன் பின்பு அந்த சீரியலில் நடித்த ஸ்வேதாவின் கணவர் தன்னிடம் மோசடி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சமீப காலமாகவே சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய 3 பவுன் செயினை வாங்கி அடகு வைத்து அதனை நாசம் ஆகிவிட்டார் எனவும் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.
மேலும் அவரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தாமரைச் செல்வி மட்டும் இல்லாமல் அவருடைய மனைவி ஸ்வேதாவும் நேரடியாகவே வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகை தாமரைச்செல்வி தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் இணைந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தெரியப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விஜயும் தன்னுடைய கட்சி சார்பில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார் . அவருடைய கட்சியில் பல பிரபலங்களும் நடிகர் , நடிகைகளும் இணைந்து வருகின்ற நிலையில் தற்போது தாமரைச்செல்வியும் இணைந்துள்ளார்.
Listen News!