• Apr 18 2026

வெளியானது 'Hi' படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ.. குஷியில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, தற்போது நடிகர் கவின் உடன் இணைந்து Hi என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். இவர், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தை 7 Screen Studios மற்றும் Rowdy Pictures இணைந்து தயாரித்து வருகின்றன. விக்னேஷ் சிவன் தொடர்புடைய இந்த தயாரிப்பு நிறுவனம், தரமான மற்றும் வித்தியாசமான படங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படம் வரும் மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் இசை தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘கண்ணக்குழியா’ வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் பாட உள்ளார்.

இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மெலோடி மற்றும் ரொமான்டிக் உணர்வுகளை கொண்ட இந்த பாடல், வெளியீட்டுக்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், ‘ஹாய்’ படம் மற்றும் அதன் பாடல்கள் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement