தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவராக பிரியங்கா மோகன் திகழ்கிறார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்துவரும் அவர், தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ‘Made in Korea’ திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அவரது மார்க்கெட் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. சினிமாவைத் தாண்டியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய புகைப்படங்கள் மற்றும் அப்டேட்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் சாறியில் எடுத்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாரம்பரிய உடையில் அவர் மிகவும் எளிமையான மற்றும் அழகான தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக அவரது சிரிப்பு மற்றும் நேர்த்தியான ஸ்டைல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். தொடர்ந்து தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் பிரியங்கா மோகன், எதிர்காலத்திலும் பல வெற்றி படங்களில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!