• Apr 27 2025

லேடி சூப்பர் ஸ்டாருனா சும்மாவா..! இன்ஸ்டாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது ஸ்டைல், எளிமை மற்றும் அழகு என்பவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். இன்று, திரைத்துறையில் முக்கிய நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு அம்மா என்ற புதிய அடையாளத்துடன் தனக்கென புதிய பயணத்தையும் ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில், நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இணைந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்வையிட்ட அனைவரும் இதனைப் பார்க்கவே மிகவும் சந்தோசமாக இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்குப் பிறகு, நயன்தாராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தன. குழந்தைகள் பிறந்த பிறகு, "நயன்தாரா இப்போது என்ன பண்ணறாங்க?" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இனிமையான பதிலாக வந்தது தான் இந்த போட்டோஷூட்.


இதில் நயன்தாரா மிகவும் அழகாக இருந்ததுடன் இன்றைய சமூகத்தில், வேலை, குடும்பம் மற்றும் புகழ் என அனைத்தையும் சமநிலைப்படுத்தும் பெண்களின் பிரதிநிதியாக நயன்தாரா திகழ்கின்றார். இது போன்ற பல இனிமையான தருணங்களை இன்ஸ்டாகிராமில் பார்ப்பதற்காக ரசிகர்கள் எப்பொழுதும் காத்திருக்கின்றார்கள்.

Advertisement

Advertisement