• Aug 18 2025

தெரு நாயோட என்ன பண்ணுறீங்க கீர்த்தி சுரேஷ்.? படு வைரலாகும் போஸ்ட்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பிரபலமானவராக காணப்படுகின்றார்.  சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னும் சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தில் இவர் கொடுத்த ரியாக்ஷன்கள் பல இளசுகளை கவர்ந்தது. அதன் பின்பு பலருக்கும் இவர் க்ரஷ் ஆகவே மாறினார்.

இதை தொடர்ந்து விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்தார். ஆனாலும் அந்த படம் பெரிதளவில்  பேசப்படவில்லை. வசூல் ரீதியாகவும்  சரிவை சந்தித்திருந்தது.


இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது பருமனை குறைப்பதற்காக வலிமையான பயிற்சிகளை மேற்கொண்டார். சமீபத்தில் வழங்கிய பேட்டியில் தான் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் இருந்ததாக வெளிப்படையாகவே கூறினார். 


மேலும் நான் உடற்பயிற்சி மட்டும் செய்யவில்லை தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது என இதையே மீண்டும் மீண்டும் செய்து வந்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்ட புகைப்படங்கள் காணப்படுவதோடு அவருடைய செல்லப்பிராணி செய்யும் சேட்டைகளும் உள்ளடங்குகின்றன. 

மேலும் தெரு நாயுடன் விளையாடும் வீடியோவையும் இணைத்துள்ளார்.  தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement