• Jun 18 2026

மாப்பிள்ளை முன்னாடி அவமானப்பட்ட காவேரி.. கடைசியில் விஜய் போட்ட ட்விஸ்ட்.! டுடே ப்ரோமோ

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதாவது, சாரதா காவேரியை பொண்ணு பார்க்க வாற மாப்பிள்ளை வீட்ட போய் பொண்ணு பேசிட்டு இருக்கும் போதே திடீரென கோபப்பட்டு கத்துவா.. மாமியாருக்கு அடங்கிப்போற மருமகளா மட்டும் இருக்கவே மாட்டா என்கிறார். 

அதைத் தொடர்ந்து காவேரி வீட்ட வந்த மாப்பிளை காவேரியைப் பார்த்து நம்ம கல்யாண பேச்சை இத்தோட நிப்பாட்டுவோம் என்கிறார். மேலும், காவேரியை பத்தின விஷயத்தை எல்லாம் அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க எனக்கு சொல்லிட்டாங்க... நல்ல வேளை அவங்களால என்னோட வாழ்க்கையே தப்பிச்சிருச்சு என்று சொல்லிட்டு மாப்பிள்ளை அங்கிருந்து கிளம்புறார்.


அதைக் கேட்ட காவேரி ஷாக் ஆகுறார். பின் காவேரி விஜய் கிட்ட அவங்க இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிட்டாங்க தெரியுமா என்கிறார். மேலும், எல்லாத்துக்கும் நீங்க தான் கரணம் என்று சொல்லி விஜய்யைப் பேசுறார் காவேரி. 

அதைக் கேட்ட விஜய் வேற யாரு உங்களை பிடிச்சுப் போய் கல்யாணம் பண்ணப் போறாங்க என்று கேட்கிறார். பின் காவேரி என்னை விரும்புற ஒருத்தரைப் பார்த்து நான் கல்யாணம் பண்ணுவேன் என்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement