ஜெயம் ரவி கதாநாயகனாகவும், ஐசரி கணேஷ் தயாரிப்பாளராகவும் உருவாகி வரும் ‘ஜீனி’ திரைப்படம் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டுடன் உருவாகும் இந்த படம், ஜெயம் ரவியின் வரலாற்றில் இதுவரை அதிக செலவில் எடுக்கப்படும் படமாகும்.
‘ஜீனி’ என்ற பெயர், ஜீனியஸ் என்பதிலிருந்து சுருக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிய இந்த படத்தை, அண்மையில் ஐசரி கணேஷ் தனது நெருங்கிய வட்டாரத்துக்கு காண்பித்து, அவர்களிடம் கருத்து கேட்டுள்ளாராம். ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் வரவில்லை என நேர்மையாக தெரிவித்துள்ளனர், சிலர் படம் ரிலீஸ் ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
இதனால், மிகப்பெரிய செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மீது ஐசரி கணேஷ் பெரும் மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது 50 நாட்கள் படத்தை ரீஷூட் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜெயம் ரவியிடம் இரண்டு தேர்வுகள் முன்வைத்துள்ளார் – ரீஷூட் செய்யவேண்டும் அல்லது படம் முழுவதுமாக ஸ்கிராப் செய்யப்படும். இந்த முடிவால், படக்குழுவில் பரபரப்பு நிலவுகிறது. தயாரிப்பாளரின் இந்த தீர்மானம், 'ஜீனி' படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.
Listen News!