• May 13 2025

அரசியலில் தடம்பதிக்க ரெடியாகும் சந்தானம்..! இன்ஸ்டாவில் வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்...

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக, “உங்கள் நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்காக 2026 தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் தான் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.


சந்தானம் கூறியதாவது,“சிம்பு நண்பர் என்பதால் அவருக்காக மீண்டும் ஒரு முறை அவருடைய படத்தில் காமெடியனாக நடித்தேன். அதேபோல் நண்பர் உதயநிதி அழைத்தால், எனக்கு சில விஷயங்கள் செட்டானா, அவருக்காக பிரச்சாரம் செய்ய தயார்.” என்றார். 

இந்த ஒரு வார்த்தை தற்போது பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் பிரபலங்கள் எண்ணிக்கையில் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக, நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தற்போது முழுமையான அரசியலுக்குள் வந்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அமைச்சர் பதவியிலும் செயற்பட்டு வருகின்றார்.


சந்தானத்தின் பதிலில் அரசியல் இல்லை, ஆனால் ஒரு அழுத்தமான மனிதநேயமும், நட்பையும் காண முடிகிறது. “நண்பன் அழைத்தா வாறேன்” என்கிற மனோபாவம், இன்று உண்மையான நட்பின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement