2021ம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த இந்தப் படம், தமிழ்நாட்டின் பாக்ஸிங் உலகத்தின் பின்னணியில் உருவான பஞ்ச் கதையாக்கமாக வெளிவந்து, பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.
இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, கோவிட் காலத்தில் ஓ.டி.டியிலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் படம் குறித்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ஆர்யா முதன்முறையாக அதிகாரபூர்வமாக கருத்துத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா, “இப்போது பா.ரஞ்சித் 'வேட்டுவம்' படத்தினை பிஸியாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் முடிந்த பிறகு வருகின்ற ஆகஸ்ட் மாதம் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு தொடங்கும். திட்டமிட்டபடி தயாரிப்புக்கள் நடந்துக்கிட்டே இருக்கு,” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை 2' குறித்த அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் விரைவில் அதிகாரபூர்வ போஸ்டர், கதாநாயகிகள் மற்றும் புதிய கதாப்பாத்திரங்கள் பற்றிய தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!