தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது சில கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு பதில் அளித்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.நிறைய ஆண்கள் பெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களிடமிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்ற கோள்விக்கு வரலட்சுமி ஏன் ஆண்கள் மட்டும் பெண்களை காதலித்து ஏமாற்றுவது கிடையாது பெண்களும் ஏமாற்றுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேலும் கேள்வி எழுந்த போது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த வரலட்சுமி அதாவது வேறு நாட்டை பொறுத்த வரையில் திருடினால் கையை வெட்டுவர்கள்,அப்போ துஷ்பிரயோகம் செய்தால் என்ன வெட்ட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அது தான் சட்டம் என்று கூறியுள்ளார்.
திருமணத்தின் பின்பு பிரிந்த கணவன்,மனைவி தங்களுடைய குழந்தைகள் விடயத்தில் என்ன செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அதாவது அந்த காலத்தில கணவன் மனைவி பிரிவென்பது பெரிய விடயமாக கருதப்பட்டது. ஆனால் இந்த காலத்தில் சாதாரணமான ஒன்றாக கருதப்படுகின்றது எனக் கூறியதுடன் குழந்தைகள் வேணும் என்று முடிவு பண்ணினதற்கு பிறகு குழந்தைகள் நலன் பற்றித்தான் யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Listen News!