• Apr 26 2025

"தனிமையாக உணர்ந்தேன்..." நாடோடிகள் அபிநயா பேட்டி..

Mathumitha / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் இடத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர் நடிகை அபிநயா. "நாடோடிகள்" படத்தின் மூலம் பிரபலமான இவர் தனது அழகான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றார். அவ்வாறே அவரது தனித்துவமான நடிப்பினால் பெரும்பாலான ரசிகர்களின் மனதைக்கவர்ந்துள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்து சாதித்த இவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில் நடிகை அபிநயா நீண்ட நாட்களாக வேகசேன கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது தனிப்பட்ட வாழ்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கார்த்திக்குடன் மனமார்ந்த உறவைப் பகிர்ந்திருக்கிறார்.


மேலும் இவர் தற்போது பேட்டி ஒன்றின் போது "எங்களுக்கு இடையே எப்போதும் அன்பும் புரிதலும் இருப்பதால் இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் என் அம்மா தவறிட்டாங்க. அவங்க இறப்புக்குப் பிறகு நான் ரொம்ப தனிமையாக உணர ஆரம்பிச்சுட்டேன். அப்புறம்தான், கார்த்திக்கின் அம்மா வந்து எங்க அப்பா கிட்ட பேசி திருமண ஏற்பாட்டை செஞ்சாங்க " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement