தமிழ் சினிமாவின் சூப்பரிடியல் ஹீரோ அஜித் மற்றும் முன்னணி நடிகை த்ரிஷா இணைந்து நடிப்பில் வெளிவந்த "குட் பேட் அக்லி" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் தற்போது வசூலில் சக்கப்போடு போட்டுக்கொண்டுவருகிறது.
இந்த நிலையில் "குட் பேட் அக்லி" திரைப்படம் மலேசியாவில் மிகப்பெரிய சாதனையை எட்டியுள்ளது. மூன்று வாரங்களில் இப்படம் மலேசியாவில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஒரு மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதே போல் மலேசியாவை புகழ்பெற்ற தமிழ் பாடகர் டார்க்கி இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி புலி புலி என்கிற பாடலை பாடியிருந்தார்.
இப்படத்தில் அந்த பாடல் இடம்பெறும் காட்சி திரையரங்கம் தெறித்தது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு மாஸாக இருந்தது.இந்த சாதனை "குட் பேட் அக்லி" படத்தின் மகத்தான வெற்றியை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அஜித் இவ்வாறு "குட் பேட் அக்லி" திரைப்படம் மலேசியாவில் மிகுந்த வெற்றியடைந்து அஜித் ரசிகர்களின் பெரும் காதலையும் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் சிம்ரன் ,பிரசன்னா ,பிரகாஷ் வாரியார் ,பிரபு ஆகியோரின் நடிப்பும் கொடூர வில்லன் அர்ஜுன் தாஸ் மாஸாக நடித்து இருந்தார்.
Listen News!